emblem_enவேலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம் 2013.
தொழிலாளர் உரிமைகளைப்பெறுவதற்கும் அறிவுறுத்துவதற்கும் ஏற்கனவே மே1 இருக்கும் நிலையில். தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி ஏப்ரல் 28 ஆம் திகதி இத்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தினம் எந்தளவுக்கு முக்கியமானது அதன் வரலாறு என்ன என்பதை இப்போது பார்ப்போம்!
ஏன் முக்கியமானது?
15 செக்கன்களுக்கு ஒரு தொழிலாளி இறக்கின்றார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அது தான் நிஜம் நாளொன்றிற்கு 6000 தொழிலாளிகள் வேலையில் ஏற்படும் விபத்துக்களாலும் வேலை மூலமாக ஏற்பட்ட நோய்த்தாக்கங்களாலும் இறக்கிறார்கள்! – இந்த அறிக்கை ilo (international labour organization) சர்வதேச தொழிலாளிகள் சங்கத்தினால் கணக்கெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. எனினும் வளர்ந்துவரும் நாடுகள் / 3ஆம் உலக நாடுகளில் அடிப்படை தொழிலாளர் வசதிகள் கூட அற்ற நிலையில் பல இறப்புக்களும் வாழ் நாள் இழப்புக்களும் ஏற்படுவது இந்தக்கணிப்பில் உள்ளடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!
வரலாற்று சுருக்கம் :
86544983வேலையில் இருக்கும் போது இறந்த தொழிலாளிகளை நினைவுகூரும் வகையில் முதல் முதலாக CUPE (Canadian Union of Public Employees) அமைப்பினால் 1984 சித்திரை 28 ஆம் திகதி “Workers’ Memorial Day – தொழிலாளிகள் நினைவுத்தினம்” என்ற பெயரில் நினைவுகூரப்பட்டது. கனடா மற்றும் அமெரிக்காவில் நினைவுகூரப்பட்ட இத்தினம் உலகம் முழுவதும் பரவியது 1989 ஆம் ஆண்டில்தான்.
1996 ஆம் ஆண்டுமுதல் “வேலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம்” என்ற பெயரில் பற்பல நல்ல திட்டங்களுடன் நினைவுகூறப்படுகிறது.
இந் நாளின் நோக்கம் என்ன?
ஆரம்பத்தில் தொழிலாளிகள் நினைவுத்தினமாக அனுஷ்டிக்கப்பட்ட இத்தினம் பெயர் மாற்றம் பெற்றதே, தொழிலாளிகளின் பாதுகாப்புத்தொடர்பான விழிப்புணர்வை தொழிலாளிகளிடமும் முதலாளிகளிடமும் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே!
இத்தினத்தில் தொழிலாளி ஒருவருக்கு அவரின் வேலையூடாக கொடுக்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகள் பற்றியும், தொழில் நிலையங்களில் இருக்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
( இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இத்தினத்தை தொழிலாளிகளே கண்டுகொள்வதில்லை என்பது வருந்தத்தக்கது… – ஐரோப்பா நாட்டு தொழிலாளிகளும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு சட்டங்கள் பெருமளவில் உள்ளது…)
நாம் என்ன செய்யலாம் :
தொழிலாளியாக இருந்தால் :
World Day for Safety and Health at Work– தொழிலாளிகளிடையே இத்தினம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
– தொழில் செய்யும் இடத்தில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்ய திட்டமிடலாம். ( முதலாளி வர்க்கத்தை பகைத்துத்தான் செய்யவேண்டும் என்பதில்லை… இது நம் உயிரை நாம் பாதுகாக்கவேண்டியதற்கான விழுப்புணர்வுத்தினம்!)
– உங்கள் நிறுவனத்தில் வேலை நேரத்தில் இறந்தவரை நினைவுகூரலாம்.
ஏனையவர்கள் :
– இத்தினம் பற்றி தெரியாதவர்களுக்கு, முதலில் தங்கள் வீட்டிலிருப்போருக்கு தெரிவிக்கலாம்.
– தொழிலாளர் உரிமைச்சட்டங்களை அடிப்படை தொழிலாளிகளுக்கு எடுத்துரைக்கலாம்.
– குறைந்தது இந்த நாள் சம்பந்தமான ஒரு வரித்தகவலை உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ் கணக்குகளூடாக
பகிரலாம்!
உத்தியோக பூர்வதளம் : http://www.ilo.org
பெயர் : மைக்கல் ஃப்ரடே
பிறப்பு : 22/9/1791
பிரபலமான காரணம் : மின் மோட்டார் உருவாக்கம்; மின் காந்தவியல் மின் வேதியவியலில் ஆற்றிய அளப்பரிய சோதனைகள்.
வாழ்க்கை குறிப்பு :
Michel Faraday
Michel Faraday
மைக்கல் ஃபரடே (Michael Faraday) 1791 ஆம் ஆண்டு புரட்டாதி 22 ஆம் திகதி (22/9/1791) இங்கிலாந்தில் பிறந்தார்.
இரசாயனவியல் மற்றும் பெளதீகவியலில் முக்கியமான ஒரு நபராக இவர் விளங்குவதற்கு காரணம், இவரின் பங்களிப்புடனேயே இன்று இன்றியமையாததாக இருக்கும் மின்சாரம் ஒரு பாவனை பொருளாக மாறியது.
வறிய குடும்பத்தில் கொல்லருக்கு மகனாக பிறந்த மைக்கல் ஃப்ரடே அக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்த சாதிவகுப்பு காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார். தனது குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புத்தகங்கள் விக்கும் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்துகொண்டார். அந் நேரம் அவருக்கு பல புத்தகங்களை படித்தறியும் வாய்ப்புக்கிடைத்தது. அதனூடாக அவரது கவனம் மின்னியலின் பக்கம் திரும்பியது.
images1812 இல் மின்னியலில் தனது தேடலை ஆரம்பித்த இவர் முதலாவது மின்கலத்தை உருவாக்கினார். அடுத்த ஆண்டே 1813 இல் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த ரோயல் சங்கத்தில் ( Royal Institution ) சேர்.ஹொம்ஃப்ரி டேவி (Humphry Davy) இடம் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அவரின் சாதிவகுப்பு காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார். ஆனால், பத்துவருடங்கள் கழித்து அதே ரோயல் சங்கத்தில் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்!
இந்த இடைப்பட்ட காலத்தில் (1821) இல் மின் காந்தவியல் சோதனையில் ஈடுபட்டு 10 வருடங்களில் மின்சார மோட்டாரை உருவக்கினார்.
1821 இல் மின் காந்தவியல் பரிசோதனையில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளின் பின்னர் மின்சார மோட்டாரை உருவாக்கி சாதித்தார்.
பிரபல இனங்காண்பு (கண்டுபிடிப்புக்கள்) :
barlow_wheelபாரடேவின் தூண்டல் விதி
பாரடே விளைவு
பாரடே கூண்டு
பாரடே மாறிலி
பாரடே கோப்பை
பாரடே முரண்பாடு
பாரடே-திறன் விளைவு
பாரடே அலை
விசைக்கோடுகள்
Pongalஇன்று (15/01/2016)நாம் அனைவரும் “பொங்கல் திருநாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள். 2006-2011 வரை தைப்பொங்கலையே தமிழர் புதுவருடப்பிறப்பாக தமிழக அரசு அறிவித்தது… ஆனால் அடுத்த ஆட்சிமாற்றம் 2011 இல் இருந்து மீண்டும் சித்திரை 1 ஐ புதவருடமாக அறிவித்தது.)
இன்று நாம், தைப்பொங்கலை ஏன் கொண்டாடுகின்றோம்… இது புதுவருடப்பிறப்புத்தானா… சித்திரை ஏன் புதுவருடப்பிறப்பானது என்பது பற்றி சுருக்கமாக பார்க்கவுள்ளோம்.
தைப்பொங்கல் என்றால் என்ன? :
உலக மக்களின் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நாள் என்று சுருக்கமாக சொல்லலாம். ( விரிவாக இணையத்தில் தேடிக்கொல்லலாம்.. பல பதிவுகள் இருக்கின்றன. )
இன்னோர் விதமாக சொல்லப்போனால், தைப்பொங்கல் ஆனது “தை திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது.
தை (தையல்) என்றால் பெண்(= பூமி(த்தாய்)) ; திரு (=சூரியன்(ஆண்)) என்ற விளக்கம் இருக்கிறது.
விளக்கம் சரி அதை கொண்டாடுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலாக…
பூமி கிழக்கு மேற்காக தன்னைத் தானே சுற்றியபடி முதலில் தெற்குப்பக்கமிருந்து வடக்குப் பக்கம் நோக்கித் சூரியனைச் சுற்றத்தொடங்கும் நாள் தான் புத்தாண்டாக “தை திருநாள்” ஆக கொண்டாடப்படுகிறது!
இப்போது நாம் பொதுவான விடையங்களை பார்ப்போம்.
தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு… இவை இரண்டில் எது தமிழரின் புதுவருடப்பிறப்பு என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
இதற்கு ஓரளவு தெளிவான(??) பதிலை அறிய வேண்டும் என்றால் நமது தமிழர்களின் பண்டைய நாட்காட்டிகள் (calendars) பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்கள் பல்வேறு கணிப்புக்களின் விளைவாக 5 நாட்காட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அவற்றின் விளைவாக ஆதித்தமிழர்களிடையே பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு,???? போன்ற 5 ஆண்டுத்தொடக்கங்கள் இருந்திருக்கின்றன. இந்த நாட்காட்டிகள் சூரிய ஆண்டு நாட்காட்டி, சந்திர ஆண்டு நாட்காட்டி என்ற ரீதியில் அமைந்தன. அதில் இன்றைய ஆண்டுமுறை (365 1/4 நாட்கள்) உடன் ஒத்துப்போவது சூரிய சந்திர நாட்காட்டிகளே. அவற்றின் பாதிப்பே இன்று நாம் இரண்டு புத்தாண்டு குழப்பத்தில் இருப்பதற்கான காரணம்!
சூரிய நாட்காட்டி சூரியனின் சுழற்சியையும் புவியின் சுழற்சி+சுற்றுகையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ( சூரியனில் இருக்கும் ஒரு கரும் புள்ளையைக்கொண்டே சூரியனின் சுழற்சியை கணித்திருக்கின்றனர் நமது பண்டைய தமிழர்கள்! )
சந்திர நாட்காட்டி சந்திரனின் பின்னால் உள்ள நட்சத்திரத்தை கவணிப்பதன் மூலம் கணிக்கப்பட்டது. (ஒரு முறை தோன்றிய நட்சத்திரம் மீண்டும் தோன்ற கிட்டத்தட்ட இன்றைய 365 நாட்கள் எடுத்துள்ளன.)
( சூரிய சந்திர நாட்காட்டி குழப்பத்திற்கு காரணம், தமிழரின் அழிந்த கண்டமாக அறியப்படும் குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடல் கோல்களின் விளைவுகளே காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் கருதலாம். இது தொடர்பாக ஆராய்ந்தால் வேறு ஒரு பிரிவுக்குள் சொல்லவேண்டி இருக்கும். அதனால் அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.)
இதில், சூரியன் தான் மக்கள் வாழ்விற்கு முக்கியமானது என்பதனாலும்… தை மாதம் இளவேனில் காலத்தில் வருவதாலும் “தை 1” புதுவருடப்பிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

thai-Pongalதை புதுவருடப்பிறப்பை நாம் மட்டும்தான் கொண்டாடினோமா?
இதற்கு பதில் இல்லை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புதுவருடப்பிறப்பு தை 1 என்பது தான்!
16 ஆம் நூற்றாண்டுவரை தை1 (ஜனவரி 14) ஐயே புதுவருடப்பிறப்பாக உலகம் கொண்டாடியுள்ளது! எகிப்தின் மூலத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான யூரியன் கலண்டர் முறையை பின்பற்றிவந்த காலம் அது… யூலியன் கலண்டரின் (Julian calendar) மூலமானது நமது சூரிய நாட்காட்டியே!
ஜப்பானியர்களின் சம்பிரதாய புதுவருடப்பிறப்பு தமிழர்களின் புதுவருடப்பிறப்பாக அமைவதுடன், அவர்களின் கொண்டாட்ட முறைகளும் தமிழர் கொண்டாட்ட முறைகளுடன் ஒத்துப்போகின்றன. ( பொங்கல் பொங்கும் போது நாம் “பொங்கலோ பொங்கல்” என்று சொல்வது மரபு அவர்கள் “FONKARA -FONKARA ” என்று சொலிறார்கள்!)
அதே போன்று நாம் போகி, தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று 4 நாட்களை கொண்டாடுவது மரபு, அவர்கள் அதில் மாட்டுப்பொங்கலை தவிர்த்து ஏனைய 3 ஐயும் நாம் கொண்டாடும் அதே வகையில் கொண்டாடுகிறார்கள்! )
எப்படி தை 1 புதுவருடப்பிறப்பு இல்லாமல் போனது…
pope gergorianஆரியர்கள் படையெடுப்பின் போது அவர்கள் மாற்றங்களுக்கு உட்படாது பயன்படுத்திவந்த நமது சந்திர நாட்காட்டியை அடிப்படையாக்கொண்ட சித்திரை வருடப்பிறப்பை நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆரிய அரசன் சாலிவாகனன் ஆணைபிறப்பித்தான். அவனின் ஆட்சியின் பின்னர் சித்திரை 1 அன்றே தமிழ் புதுவருடப்பிறப்பு என்ற நிலை உண்டாகியது. ( இன்றுவரை நாம் மீழவில்லை என்பது வருத்தமே… இது தொடர்பான நுணுக்கமான ஆராய்வுகளை விடுத்துவிட்டு ஆட்சிக்கு ஏற்ப புதுவருடப்பிறப்பை மாற்றி மாற்றி கொண்டாடுகின்றோம்.)
தை 1 (ஜனவரி 14) உலக புதுவருடப்பிறப்பு என்றால் ஏன் ஜனவரி 1 புதுவருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது?
16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை சார்பாக “13 ஆம் பொப் கிரகெரி( Pope Gregory XIII) ” நாட்காட்டியை மாற்றி அமைட்த்தார் அதன்படி திடீரென ஒரே நாளில் 10 நாட்கள் ஆண்டில் இருந்து கழிக்கப்பட்டன. அடுத்து தவணை முறையில் ஏனைய நாட்கள் கழிக்கப்பாடு தமிழரின் நாட்காட்டியில் இருந்து 14 நாட்கள் பிந்தயை புதிய நாட்காட்டியை அறிமுகம் செய்து “கிரகெரியன் நாட்காட்டி” யை அறிமுகம் செய்தார்.!
இவ் மாற்றத்திற்கு பல காரணம் கூறப்பட்ட போதும்… மதம் அற்ற தமிழர்களின் நாட்காட்டி உலக நாட்காட்டியாக இருப்பதை விரும்பாத காரணத்தினாலேயே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ஆழ்ந்த ஆராய்வுகள் கூறுகின்றன.
இவ் ஆக்கத்தை எழுதிவிட்டேன். ஆனால், பல தமிழர்களே இதை நம்பப்போவதும் இல்லை. ஆ ஊனா எல்லாமே தமிழர்களது தான் என்று சொல்கிறோம் என்று கலாய்ப்பார்கள். அப்படியே தமிழரதாக இருந்தாலும் இப்போது ஏன் தமிழர் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள்… காரணம், குதர்க்கம் மட்டும் பண்ணுவது தான் காரணம் என்பதை அறியாமல்….
நம்புவோர் இவ் ஆக்கத்தை பகிருங்கள்.
நம்பாதவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவியுங்கள்.
( இந்த ஆக்கதில் இருக்கும் பிழைகள், குறைகளை சுட்டிக்காட்டவும்.)
free tamil fonts1000 ம் அழகிய கட்டுப்பாடற்ற எழுத்துருக்களின் தொகுப்பே இங்கு தரவிறக்க தரப்பட்டுள்ளது. இவ் எழுத்துக்கள் காப்புரிமை அற்றவை என்பதால் டிஸைனர்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
அளவு : 31 Mb
தரவிறக்க : Source 01  | Source 02
tamil technologyகணினியில் அழிந்த தரவுகளை மீட்டெடுக்க உதவும் ஒரு மென்பொருள். Portable மென்பொருளாக உள்ளமையால் கணினியில் நிறுவத்தேவையில்லை. இலகுவாக USB (விரலி) களில் கொண்டு செல்லலாம்.
சிறப்புக்கள் :
  • எந்தவகை வந்தட்டுக்களுக்கும் இயைபுடையது. (ATA, SATA, SCSI, USB, IEEE1394.)
  • iPod இல் இருந்தும் தரவுகளை மீட்க உதவும்.
  • FAT12, FAT16, VFAT, FAT32, NTFS/NTFS5, EXT2 மற்றும் EXT3 போன்ற இயக்கங்களுக்கு ஏற்புடையது.
  • USB, digital cameras, MP3 player களில் இருந்தும் தரவுகளை மீட்க உதவுகிறது.
  • இலகுவான பாவனை அமைப்பு.
  • ஒரே சொடுகில் தரவுகளை மீட்க முடியும்.
அளவு :  9.5 Mb
தரவிறக்க : Source 01 Source02 SUPPORT
உங்களுகளது சொந்த கையெழுத்தை ஒரு “எழுத்துரு (font) ஆக மாற்ற உதவும் ஒரு சிறிய, சிறந்த மென்பொருள் இது.
scanahand-freeசெய்முறை :
இவ் மென்பொருளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் வடிவமைப்பை print செய்துகொள்ளுங்கள்.
print செய்யப்பட்ட தாளில் குறிப்பிட்ட படி ஒவ்வொரு எழுத்திற்கு கீழேயும் உங்கள் கையால் எழுத்தை எழுதுங்கள். (கறுப்பு marker அல்லது கறுப்பு தடித்த பேனாவை* பயன்படுத்தவும்.)
பின்னர் எழுதப்பட்டதை scan செய்து மென்பொருளுடன் இணைக்கவும்.
அவளவும் தான், உடனடியாக உங்களது தனித்துவ எழுத்துரு தயாராகிவிடும்!
வின்டோஸ் கணினிகள் மற்றும் மக் கணினிகளுக்கு பயன்படுத்த கூடியதாக அந்த எழுத்துருக்கள் இருப்பதுடன். இணையத்தளங்களிலும் இணைய எழுத்துருவாக பயன்படுத்த இந்த மென்பொருள் உதவுகிறது.
அளவு: 6Mb
தரவிறக்க : Facebook Link 01 Link02
ஃபேஸ்புக் கணக்கை திருடுவது எப்படி? திருட்டை தடுப்பது எப்படி என்பதை இன்று பார்க்கலாம். ( சாதாரண திருட்டு முறை/ தடுப்பு)
சாதாரணமாக எந்த வித hacking Code களுக்குக்கும் தாக்குப்பிடிக்க கூடியவகையிலேயே ஃபேஸ்புக் நிறுவனம் தமது தளத்தை நடாத்திவருகிறது. ஆனால், பல கணக்குகள் Codes எதுவும் இல்லாமலேயே திருடப்பட்டு விடுகின்றன. அது எப்படி நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்.
படி 1 : மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ளுதல்!
நீங்கள் திருட நினைக்கும் ஃபேஸ்புக் கணக்கு உங்களுக்கு தெரிந்தவருடையதாகவே இருக்கும். அவரின் மின்னஞ்சல் முகவரியை ஃபேஸ்புக் About பகுதியில் பார்வையிட முடியும். + HUMANITY +அல்லது அவரின் twitter, google+ போன்ற சமூகத்தளங்கள் ஏதாவது ஒன்றில் காணமுடியும். தெரிந்தவர் என்றால் நேராக கேட்டும் பெற்றுக்கொள்ளலாம்!
முகவரி கிடைத்தால் முதல் படி வெற்றி! படி 2 இற்கு செல்லுங்கள் அல்லது படி 5.
படி 2 : மின்னஞ்சலை திருடுதல்!
மின்னஞ்சல் முகவரி கிடைத்ததும் அது எந்த நிறுவனத்தினது என்பதை பார்வையிடவும் பெரும்பாலும் Gmail + FUTURE +, live /hotmail (Msn), yahoo நிறுவனங்களாக இருக்கும். இப்போது அந்த நிறுவன மின்னஞ்சல் இயக்க பகுதிக்கு செல்லவேண்டும். இங்கு உதாரணமாக live மின்னஞ்சல் காட்டப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் கடவுச்சொல் மாற்றல்! Step A
மின்னஞ்சல் கடவுச்சொல் மாற்றல்! Step A
Can’t access your account? என்ற கடவுச்சொல்லை மாற்ற உதவும் பகுதிக்கு செல்லவேண்டும்.
அங்கு நீங்கள் திருட இருக்கும் live /hotmail மின்னஞ்சலை கொடுக்கவும். கீழே உள்ள இரகசிய எழுத்துக்களை எழுதி Next அழுத்தவும்.
மின்னஞ்சல் கடவுச்சொல் மாற்றல்! Step B
மின்னஞ்சல் கடவுச்சொல் மாற்றல்! Step B
இப்போது முக்கியமான பகுதியில் இருப்பீர்கள், (படம் 3)
மின்னஞ்சல் கடவுச்சொல் மாற்றல்! Step C
மின்னஞ்சல் கடவுச்சொல் மாற்றல்! Step C
அங்கு பெரும்பாலும் Security Question பகுதி இருக்கும் இருந்தால் படி 3 இற்கு செல்லவும். இல்லை என்றால் படி 5
படி 3 :
Security Question இற்கு நீங்கள் இப்போது சரியான பதிலை கொடுக்கவேண்டும். ( 3 சந்தர்பங்கள் தான் ஒரு நாளில் தரப்படும்.)
பாதுகாப்பு கேள்விகள் பெரும்பாலும், Mother’s birthplace, Mother’s date of year, best childhood friend, Name of first pet,Favorite teacher, Favorite historical person… என்ற கேள்விகளாக அமையும்.
Mother’s birthplace : இலகுவாக கண்டுபிடிக்ககூடிய ஒன்று, நீங்கள் திருட இருக்கும் நபரின் சொந்த ஊரை தெரிந்துகொண்டால் மின்னஞ்சல் உங்கள் வசம். ( சொந்த இடத்தை அவரின் சமூகத்தளங்களில் பார்வையிடலாம். + சமூகத்தள பாதிப்பு+)
Mother’s date of year : திருட இருக்கும் நபரின் தாயின் வயதை இலகுவாக கணிக்கமுடியும். அல்லது அவரிடமே கேட்டுக்கொள்ளலாம்.
best childhood friend : சமூகத்தளங்களில் அறியலாம், உங்கள் நண்பரின் கணக்கு என்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
Name of first pet : சற்று கடினம் கேட்டால் தான் தெரியும். ஆனால், நமது ஊர்களில் நாய்கள் தான் பெரும்பாலும் சொல்லப்பிரானிகள்.. அவைகளுக்கு குறிப்பிட்ட பெயர் தெரிவுகள் மட்டும் தான் இருக்கும். முயற்சிக்கலாம்.
Favorite teacher : ?????
Favorite historical person : ஃபேஸ்புக்கில் அவரின் விருப்ப பக்கங்களை பார்வையிடலாம்.
சரியான பதிலை கொடுத்தால், புதிய கடவுச்சொல்லை இடக்கேட்கும்… அதன் பிறகு மின்னஞ்சல் உங்களுடையது!
இல்லை என்றால் படி 5.
படி 4 : மின்னஞ்சலை திருடிய பின்னர், facebook.com இற்கு சென்று… Password பகுதிக்கு கீழுள்ள Forgot your password? ஐ சொடுகவும்.
ஃபேஸ்புக் கடவுச்சொல் மாற்றல் 01
ஃபேஸ்புக் கடவுச்சொல் மாற்றல் Step A
அங்கே அடையாலத்திற்கு கேட்க்கப்படும் மின்னஞ்சலில் திருடப்பட வேண்டியவரின் முகவரியை கொடுக்கவும்.
தேடலின் பின்னர் அந்த மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் ஃபேஸ்புக் கணக்கு காட்டப்படும். அது நீங்கள் திருட நினைத்த நபர் உடையது என்றால் உங்களுக்கு வெற்றி! மின்னஞ்சலை மாற்றுவதற்கான வேண்டுகோலை அழுத்தி Continue வை அழுத்தவும்.
ஃபேஸ்புக் கடவுச்சொல் மாற்றல் Step A
ஃபேஸ்புக் கடவுச்சொல் மாற்றல் Step B
தற்ப்போது அந்த மின்னஞ்சலிற்கு அனுப்பப்பட்ட கடவுச்சொல்லை ஃபேஸ்புக் தளத்தில் கேட்கப்பட்ட இடத்தில் கொடுக்கவும்!
ஃபேஸ்புக் கடவுச்சொல் மாற்றல் Step C
ஃபேஸ்புக் கடவுச்சொல் மாற்றல் Step C

கணக்கு உங்கள் வசம், இல்லை என்றால் படி 5!
படி 5 :
நீங்கள் இவ்வளவு முயன்றும் கணக்கை திருடமுடியவில்லை என்றால், திருடப்பட வேண்டியவரின் கணக்கின் பாதுகாப்பை போன்று உங்கள் கணக்கையும் பாதுகாத்துக்கொள்ளவும்!
முக்கியமாக கடவுச்சொல் மீழப்பெற உதவும் சாதனமாக உங்கள் கைத்தொலைபேசி இலக்கங்களை கொடுப்பதே மிகச்சிறந்த முறை!
பாதுகாப்பு கேள்விகளை தவிர்ப்பதே மிக நல்லது. ( Yahoo தளத்தில் 2 கேள்விகள் கேட்கப்படுபதால் சற்றுப்பாதுகாப்பானது.)
நீங்கள் விட்ட தவறுகளை நீக்க தற்போது, உடனடியாக உங்கள் கணிக்கில் நுழைந்து உங்கள் அடையாலப்படம் மற்றும் பெயரை சொடுகும் போது வரும் Accounts Settings இல் உங்கள் கடவுச்சொல் மீழ் பெறும் படிகளை மாற்றிக்கொள்ளவும். :)
இன்று உங்கள் இணையத்தளத்தை அல்லது வலைப்பக்கத்தை வேறு ஒரு தளம் முழுமையாக பயன்படுத்துவதை எப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
உதாரணமாக, மனிதன்- லங்காசிறி போன்ற தளங்களை வேறு பல இணையத்தளங்களை தமது தளத்தில் iframe மூலமாக இணைத்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறான iframe களில் உங்கள் தளம் சிக்காமல் பாதுகாப்பது எப்படி என்பதை காணலாம்.
முதலில் iframe என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
iframe என்பது ஒரு தளத்தில் இன்னோர் தளத்தை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்து பயன்படுத்த உதவும் ஒரு தொழில் நுட்பமாகும். ( சாதாரணமாக நாம் Youtube வீடியோக்களை இணைப்பதும் இதே முறையில் தான்!)
iframe இன் தீமைகள்!
  • உதாரணமாக ஒரே தளத்தில் பல தளங்கள் இணைக்கப்படும் போது, அந்த தளத்திற்கு சென்றால் அனைத்து தளங்களையும் பார்க்க முடியும் என்ற மன நிலை பாவணையாளர்களிடம் தோற்றுவிக்கப்படும். இதனால் ஏனைய தளங்களுக்கான நேரடி பாவணையாளர்கள் குறைவார்கள்.
  • உங்கள் தளத்தில் தங்கி நிப்போரின் நேரம் பங்கிடப்பட்டுவிடும். ( இப்போது Facebook தளத்தில் நீங்கள் Youtube Videoவை பகிர்ந்தால்… அது தொடுப்பாக மட்டுமே பகிரப்படும். முன்பு போல் Facebook இலேயே நீங்கள் Video வை பார்க்க முடியாது! காரணம் தள வருகையை அதிகரிக்கவே! )
தடுப்பு முறை :
கீழுள்ள Java Script ஐ உங்கள் தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இணைக்கவேண்டும்! ( உங்கள் தளத்தின் Header அல்லது footer அனைத்து பக்கங்களுக்கும் பொதுவானது என்றால்… Header இல்<head> இக்கு கீழே இவ் நிரலை இணைத்தால் போதும்!)
<script type=”text/javascript”>
<!–
if (top.location!= self.location) {
top.location = self.location.href
}
//–>
</script>
இனி உங்கள் தளத்தை / வலைத்தளத்தை யாருமே தங்கள் தளத்தில் iframe ஆக இணைக்க முடியாது! இணைத்தாலும் iframe இற்குள் கட்டுப்படாது!

காது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புதிய சாதனம் ஒன்று உருவாக உள்ளது.
இச்சாதனம் கை அசைவுகளை சொற்களாக மாற்றும். பின்னர் சொற்களை ஒலி வடிவமாக்கும். கை அசைவுகளை முப்பரிமாண வடிவில் உணர்ந்து அதற்கேற்ப சொற்களை உருவாக்க கூடியது.
இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் 2015 முடிவிற்குள் சுமார் 15000 அசைவுகளை திறம்பட உணர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் இச்சாதனம் ஒரு முப்பரிமாண ஒளிவாங்கி, சிறுதிரை மற்றும் ஒலி பெருக்கியுடன் கூடிய கையடக்க சாதனமாக உருவாகும் என் இத்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
image
image
Motionsavvy எனும் இச்சாதனை உருவாக்க நிறுவன தளத்தில் மேலும் அறியலாம்.
கேம்பிறிட்ஜ் (Cambridge) பல்கலைகழகம் புதிய இணைய மென்பொருளொன்றை  அறிமுகம் செய்துள்ளது.
Facebook இல் நீங்கள் இதுவரை செய்த likes ஐ வைத்து உங்கள் மனோவியல் தொடர்பான ஒரு அறிக்கையை இவ் மென்பொருள் சமர்ப்பிக்கும்.
முக்கியமான ஐந்து பிரிவுகளாக இது பயணர்களை வகைப்படுத்துகிறது. நண்பர்கள் மற்றும் வேலை சகாக்கள் ஒருவரின் மனோனிலையை தீர்மானிப்பதை விட இது துல்லியமாக தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
‘Apply Magic Sauce’ என அழைக்கப்படும் இவ் மென்பொருளில் உங்கள் Facebook பயணர் கணக்கு மூலம் நுழைந்து அறிக்கையை பெறலாம்.
image
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முப்பரிமான அச்சு இயந்திரங்கள் (3D Printers) பிரபலமாகத்தொடங்கின. இன்னும் அது முழுமையான பொதுப்பாவணைக்கு வரமுன்னரே இப்போது அதன் அடுத்த கட்டமாக புதிய ஒரு தொழில் நுட்பம் முன்னோட்டமுறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முப்பரிமான உணவு அச்சீட்டு இயந்திரமாக அறிமுகமாகியிருக்கும் இவ் இயந்திரம் உணவுகளை தயாரிப்பதற்கு உதவவுள்ளது. அதாவது, பிரபல ஆங்கில திரைப்படங்கள் சிலவற்றில் எதிர்வு கூறப்பட்ட எதிர்கால உணவு தயாரிப்பு முறைகளுக்கு ஒரு முதல் படி இயந்திரமாக இது உருவாகியுள்ளது.
சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியாவிட்டாலும் ஆரம்ப கட்டத்தில் சில வகை பழங்களின் சுவையை உடைய உணவுகளை இவ் இயந்திரம் அச்சிடவல்லது!
அதாவது, chocolate, vanilla, mint (புதினா) போன்ற வகை சுவைகளையுடைய பதார்த்தங்களை இது அச்சிடக்கூடியது.
இதன் தயாரிப்பாளர்கள், எதிர் காலத்தில் இவ்வகை இயந்திரங்களால் ஒரு hamburger(ஹம்பேர்கர்) ஐ கூட உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Foodini என அழைக்கப்படும் இவ் இயந்திரம் பற்றிய மேலதிக விபரங்களை கூகுளில் தேடலாம்.
பாலடைந்த வசிப்பிட அடுக்கு மாடியொன்றை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்துக்கொண்டார். 1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் திறக்க முடியாது இருந்தது. உரிமையாளர் பொலிஸாரை தொடர்பு கொண்டார். உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பெயரில் பொலிஸார் வீட்டுக்கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.
அவர்கள் அங்கு கண்ட காட்சி அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆம், அங்கு எலும்புக்கூடாகிப்போன ஒரு சடலம் தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னே இருந்த கதிரையில் அமர்ந்திருந்தது! அச்சடலத்தின் அருகே இருந்த மேசை மீது என்றோ போடப்பட்ட கோப்பியும் இருந்தது.
பின்னர் பெறப்பட்ட தகவல்களின் படி,
1924 ல் பிறந்த ஹெவிகா கொலிக் (Hedviga Golik) என்ற காணமல் போனதாக அறியப்பட்ட நபரின் சடலமே அது என இனங்கானப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்தப்பெண்ணையாரும் கண்டிருக்கவில்லை. அவரது அயலவர்கள் அந்தப்பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடியைவிட்டு வெளியேறி விட்டார்கள்.
கோப்புயுடன் தனது கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னர் அமர்ந்து, ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன் அந்தப்பெண்ணை எவரும் தேடவில்லை. சுமார் 42 வருடங்களுக்குப்பின்னர், எதேச்சையாக பொலிஸாரால் அவரது உடல் கண்டறியப்பட்டது!
மேலும் வியப்பான சம்பவங்களை அறியலாம் தொடர்ந்திருங்கள்!
dead-undiscovered
நட்தாசா, 12 வயது நிரம்பிய பிரேசில் பெண்.
சுமார் 1.6 மீட்டர் நீளமான தனது தலைமுடியை விற்று தனது பெற்றோரின் கனவை நனவாக்கியுள்ளார்.
Hair-selling-tamilபிறந்தது தொடக்கம் தலைமுடியை வெட்டாது இருந்த தனது முடியை விற்றதன் மூலம் 4 500 டொலர் பணத்தை பெற்றுக்கொண்டார். தனது பெற்றோரின் ஆசையைகு இடன்சலாக இருந்த மிகுதிப்பணத்தை அதைக்கொண்டு கட்டியதன் மூலம் தமக்கென புதிய வீட்டை வாங்கியுள்ளார்!
எனினும் தலைமுடி வெட்டப்பட்டதன் பின்னர் தான் புதிய வாழ்க்கை வாழ்வதாக உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
காரணம், முன்னர் தனது நீன்ட தலைமுடியை பராமரிக்க தினமும் ஒன்றரை மணி நேரங்களை செலவிட வேண்டி இருந்ததாகவும் தன்னால் மற்றவர்கல் போல் கடற்கரையில் விழையாடமுடியாது இருந்ததாகவும் இப்போது அனைத்தும் மாறிவிட்டதாகவும் அந்த சிறுமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வோல்டர் ஜெயோ, பிறித்தானிய போர் வீரராக முதலாம் உலக யுத்தத்தில் பங்கேற்ற நபர்.
யுத்தத்தின் போது 1916 ஆம் ஆண்டு அவரது முகம் பாதிப்புக்குள்ளாகி சிதைந்து போனது.
கண்கள் மூக்கின் மேற்பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் ஹோர்லன்ட் கியிஸ் என்பவரால் பொறுப்பேற்கப்பட்டார்.
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படும் ஹோர்ல்ட் அந்த கால கட்டத்தில் தான் “பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை” இக்கு என தனி மருத்துவ பிரிவை ஆரம்பித்திருந்தார்.
1917 ஆம் ஆண்டு, வோல்டரின் பாதிப்புறாத ஏனைய உடல் பகுதிகளில் இருந்து தசைகள் எடுக்கப்பட்டு முகத்தில் பொருத்தப்பட்டு சிகிச்சை ஆரம்பமானது.
ஆரம்ப கட்டம் என்பதால் பலருக்கு சிகிச்சைகள் தவறிப்போயின. ஆனால், வோல்டரின் சிகிச்சை கச்சிதமாக நிறைவேறியது. புதிய முகத்தோற்றம் அவருக்கு கிடைத்தது!
உலகின் முதலாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையாக இது உத்தியோக பூர்வமாக ஏற்று கொல்லப்பட்டுள்ளது.
First+plastic+surgery

வினோதமாக பிறந்த சில மிருகங்களை பற்றி இன்று பார்ப்போம்…
Octogoat : எட்டுக்கால் ஆடு
Octogoat
Octogoat
Croatia வில் Zoran Poparic எனும் விவசாயின் பண்ணையில் உள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி விதிகளுக்கு மாறான தோற்றத்துடன் காணப்பட்டது.
8 கால்களுடன் பிறந்த அந்த குட்டி ஆட்டிற்கு ஆண், மற்றும் பெண் உறுப்புக்கள் ஒருங்கே அமைந்திருந்தன.
இரு வெவ்வேறு கருக்கலாக உருவாகி இடையில் தடைப்பட்டதால் அக் குட்டி அவ்வாறு பிறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Octogoat என பெயர் சூட்டப்பட்ட இவ் விலங்கு பிறந்து 7 நாட்களில் இறந்து போனது.
இரண்டு கால் நம்பிக்கை!
Faith, மூளையில் ஏற்பட்ட ஏதோ ஒரு மாற்றத்தினால் முன்னங்கால்கள் வளராமல் தடைப்பட்ட நாய். நடக்க முடியாத அவ் நாய் அதன் தாயினால் ஒதுக்கப்பட்டு தெருவோரத்தில் இன்னோர் நாயினால் ஆபத்து ஏற்பட இருந்த நிலையில் 17 வயதான Reuben Stringfellow எனும் பெண்ணால் தத்தெடுக்கப்பட்டது.
அவர் வீட்டில் வளர்ந்த போது, தானாகவே இரண்டு கால்களில் தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பித்தது அந்த நாய். சிறிது காலத்தில் பாய்தல், ஓடுதல் என சாதாரணமாக நாய்களிடம் இருக்கும் துடிதுடிப்புடன் வளர ஆரம்பித்தது. ஆனால், இரண்டு கால்க‌ளுடன்!
இப்போது, மருத்துவமனைகள் மற்றும் இராணுவ முகாம்களில் மனிதர்களுக்கு தெம்பூட்டுவதற்கான பணியை இவ் நாயினூடாக செய்து வருகிறார்கள்.
tow-head-snakeகறுப்பருள் இரட்டை வெள்ளை!
Black rat snakes என அழைக்கப்படும் இவ் வகை பாம்புகள் பொதுவாக கறுப்பு நிறமானவை தாடைகள் மட்டுமே வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், நீங்கள் படத்தில் பார்ர்கும் பாம்பு வெள்ளை பழுப்பு நிறத்தில் பிறந்தது மட்டுமல்லாது இரட்டைத்தலையுடன் பிறந்தது!
1999 ஆம் ஆண்டில் இப் பாம்பின் உரிமையாளரிடம் இருந்து அமெரிக்காவில் உள்ள ஒரு காட்சியகத்தினால் சுமார் 15 000 டொலர் கொடுத்து வாங்கப்பட்டது.
அதன் 8 வயதில் மரணித்தது.
முத்தலை தவளை
3head-frogGreen Umbrella Nursery எனும் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் நுழையும் போது மூன்று தவளைகள் ஒன்றன் மீது ஒன்று நிற்பதை அவதானித்தான். சற்று நேரத்தில் அத்தவளை அசைந்த போது அது மூன்று தலைகளுடன் இருக்கும் ஒரே தவளை என்பதை அவ் மாணவன் அறிந்துகொண்டான். பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்த பின் அவர்கள் அத்தவளையை பிடித்து வைத்துக்கொண்டார்கள்.
ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் 6 காள்களுடனும் மூன்று தலைகளுடனும் பிறந்த அத் தவளை ஆரோக்கியமானதாகவும் மூன்று தலைகளும் தனித்தனியே இயங்க கூடிய வகையிலும் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.
சூழல் மாசடைவும், அந்த பகுதியில் இருக்கும் அணுக்கதிர் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு தொழிற்சாலையும் இவ்வாறு தவளை பிறப்படதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…
இந்த பதிவை வாசித்த பின் நீங்கள் குடிக்கப்போகும் தண்ணீர் மீதான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும்.
உலகில் இருக்கும் நீரின் அளவில் சுமார் 96 வீதம் வரை சமுத்திரங்களிலும் 2வீதம் பனிக்கட்டியாகவும் அடுத்த 2வீதம் தரை, ஏரி, வளி மண்டலத்திலும் இருக்கிறது.
வருடாந்தம் சுமார் 121,000 cubic miles தண்ணீர் ஆவியாதல் + மழை காரணமாக பூமியில் சுழற்சி அடைகிறது.
நாம் வெளியேற்றும் அனைத்து கழிவுகளும் பூமியின் இடைத்தட்டுவரை சென்று பின்னர் சமுத்திரங்களில் கலக்கிறது.
பூமியில் டைனோசர் காலம் சுமார் 186 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது.
நாம் சுமார் 200 000 வருடங்களாகவே பூமியில் வாழ்கிறோம்.
இதன் அடிப்படையில் பார்த்தால், டைனோசரின் சிறுநீர் நிலமூடாக கடலை அடைந்து பின்னர் பின்னர் சுழற்சி முறையில் மழையாக பெய்து குடி நீராகியுள்ளது. அதன் அடிப்படையில் நாம் குடிக்கும் ஒவ்வொரு குவளை நீரிலும் டைனோசரின் சிறு நீர் உள்ளது.
Ref : Dailymail (en)
Charles Fishman
image
img_rit948
“நெக்டெர்னல் லெகோப்தாலமஸ் “ [ Nocturnal lagophthalmos ] என்று மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான்.
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது(அரைக்கண்) இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடிய படியே தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம்.
பெரியவர்களுக்கு எனும் போது தோல் நோய் பிரச்சனை அல்லது முகத்தில் ஏதேனும் சர்ஜரி செய்திருந்தால் இந்த பிரச்சனை இருக்கும். பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை (அலர்ச்சி/அயர்ச்சி) ஏற்படுத்தும். தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.
அடுத்த கேள்வி ஒரு கண்னை மட்டும் திறந்தபடி தூங்க முடியுமா ?
இயல்பின் மனிதனுக்கு இதுவும் முடியாத காரியந்தான். பறவைகள், விலங்குகள் அந்த மாதிரி தூங்குவது உண்டு. பெரும்பான்மையான விலங்குகள் ஒரு கண்ணை மூடி தூங்கு கின்றன. அப்போது அவைகளுக்கு ஒரு பக்க மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. இமைகளே இல்லாத விலங்குகள் அதிகம் உண்டு.
மீன்களுக்கு இமைகளே இல்லை பிரச்சனை இல்லை. டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கி கொண்டே பறக்கும்.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home